பார்க்கும் பார்வை
கிருஷ்ணசாமி… கிருஷ்ணசாமி… யாரோ கதவு தட்டும் சப்தம் கேட்டு கதவை திறந்தார் கிருஷ்ணசாமி, ‘அடடே.. நம்ம குப்புசாமி.. வா வா.. எத்தனை நாளாச்சு உன்னைப் பார்த்து வாங்கோ மாமி… இன்னும் இரண்டு பேர் வந்திருக்காளே …
கிருஷ்ணசாமி… கிருஷ்ணசாமி… யாரோ கதவு தட்டும் சப்தம் கேட்டு கதவை திறந்தார் கிருஷ்ணசாமி, ‘அடடே.. நம்ம குப்புசாமி.. வா வா.. எத்தனை நாளாச்சு உன்னைப் பார்த்து வாங்கோ மாமி… இன்னும் இரண்டு பேர் வந்திருக்காளே …
அலுவலக நிமித்தமாகக் கொச்சின்வரை செல்ல வேண்டியிருந்தது. காலை 7:30 மணி இருக்கும். அலபி எக்ஸ்பிரஸ் திருச்சூரைத் தாண்டிச் சென்றுகொண்டு இருந்தது. என் இருக்கைக்கு எதிரில் உள்ள நபர் ஹிந்து நாளிதழைப் படித்துக்கொண்டிருந்தார். படித்து முடிக்கும்வரை பொறுமையைக் கடைபிடித்த நான் அந்த நபர் படித்த நாளிதழை மடித்து வைக்கும் நேரத்தில்,
பத்து பொருத்தங்களைப் பற்றி கேள்விபட்டுள்ளோம். அது என்ன சார் பணீரெண்டாம் பொருத்தம் என்கீறீர்களா…
ஒருவருடைய வாழ்க்கை மிகச் சிறந்த முறையில் அமைய வேண்டுமானால் அவருக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை நடந்த சிறந்த வாழ்க்கைத் துணை தேவைப்படுகின்றது. பெண்ணுக்கு 21 வயதுக்குள் ஆணுக்கு 27 வயதுக்குள் திருமணம் நடந்து விடுமேயானால் அவர்களது இல்லற வாழ்க்கையின்
மானுடராய்ப் பிறந்த அனைவருமே இந்தப் பூவுலகிற்கு வரும்போது என்ன கொண்டு வந்தோம். இவ்வுலகை விட்டுப் போகும்போது என்ன கொண்டுசெல்லப் போகிறோம் என்ற எண்ணம் பலருடைய உள்ளங்களில் தாமாகவும் மற்றவர்களால் சொல்லப்பட்டும் எப்போதும் எழுந்துகொண்டு இருக்கின்ற சிந்தனைகளாகவே இருக்கின்றன.
ஒரு ஜீவன் இந்த உலகில் ஜனித்த உடனேயே அவருடைய ஜாதகம் அவரது பூர்வ புண்யத்தைத் தெளிவாக உணர்த்தி விடும். 12 வயதுக்கு மேல்தான் ஒரு ஜீவன் பாபங்களைச் செய்ய ஆயத்தம் ஆகின்றது என்கின்றது ஜோதிட சாஸ்திரம். 12 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் ஸ்திரம் இல்லை என்பதினால் சொல்லப்பட்ட கருத்து இது.
“என்ன ராமசாமி… விஷயம் தெரியுமா உனக்கு.” பீடிகையுடன் ஆரம்பித்தார் கிருஷ்ணசாமி.
“என்னப்பா… என்ன அப்படி பெரிய விஷயம் சொல்லப் போறே…” ஆர்வத்துடன் கேட்டார் ராமசாமி.
“நடுத்தெரு குப்புசாமி ஐயர்வாள் இருக்காரே. அவர் பெண் நேற்று இதராள் பையன் ஒருவனை இழுத்துக்கொண்டு ஓடிப்போய் விட்டாளாம்… எல்லாம் ப்ராரப்த்த கர்மா” என்று தலையில் அடித்துக்கொண்டார் கிருஷ்ணசாமி.
மற்றவர்கள் பொருளுக்கு ஆசைப்படாதவர்கள் எவரும் இந்த உலகில் இருக்கமாட்டார்கள் என்று சொல்லலாம். குழந்தைப் பருவம் முதலே இந்த அற்ப ஆசை தொடங்கி பெரியவர்கள் ஆகும்போது மாறுபட்ட விதத்தில் இந்த ஆசை பரிணமிக்க ஆரம்பித்துவிடுகின்றது. மற்றவர்களின் பொருளை எடுப்பது, மறைத்து வைத்துக்கொள்வது போன்ற எண்ணங்கள் நம்மைச் சிறுவயது முதலே ஆட்கொள்ளத் துவங்கிவிடுகின்றன.
“ஸார்… ராமசாமி என்கிறது…”
“நான்தான். என்ன விஷயம். கூரியர் தபாலா. கொடுங்கள்” என்று தபாலை வாங்கிப் பிரித்தார் ராமசாமி. ராஜா மஹாலில் நடக்க இருக்கும் ‘பாலயக்ஞம்’ குழந்தைகள் நடத்தும் பாட்டுக் கச்சேரிக்கான இரண்டு டிக்கெட்டுகள்.
கிருஷ்ணசாமியை அழைத்துக்கொண்டு போய் வரலாம் எனத் தீர்மானித்தார் ராமசாமி. கச்சேரி நாளும் வந்தது… இருவருக்கும் முதல் வரிசையில் அமர இடமும் கிடைத்தது.
“என்ன ராமசாமி… இன்று நம்மூர் கோயிலிலே அங்கயர்கரசி உபன்யாசம்… போய்வரலாமா…”
“அதிசயமாயிருக்கே கிருஷ்ணசாமி… எங்கே கூப்பிட்டாலும் வரமாட்டேன்னு சொல்லுவே. நீயே கூப்பிடறேன்னா ஏதோ விஷயம் இருக்கு…” ராமசாமியும் புறப்பட்டார்.
“பொய்யான மெய்” இது தான் தலைப்பு கணீரென்ற குரலில் ஆரம்பித்தார் அங்கயர்கரசி.
கிருஷ்ணசாமி ஸ்வாரஸ்யமாக பேப்பரில் மூழ்கி இருந்தார்.
“என்ன கிருஷ்ணசாமி… நான் வந்ததுகூடத் தெரியாமல் அப்படி என்ன பேப்பரில் ஸ்வாரஸ்யம் இன்னிக்கு…”
“வா.. வா… ராமசாமி.. நீ சொன்ன மாதிரி ஸ்வாரஸ்யமான செய்தி ஒன்று படிச்சேன். அதுவும் எனக்குத் தெரிந்த குடும்பத்தைப் பற்றிய செய்திதான்.. 2004இல் நடந்த நிகழ்ச்சி இது. இப்போது அதற்கான பலன் கிடைத்துள்ளது…”
“கங்கா ஸ்னானம் ஆச்சா கிருஷ்ணசாமி.”
“ஆச்சு. . . ஆச்சு. . . ராமசாமி. . .” ரொம்ப குதூகலத்தில் இருந்தார் கிருஷ்ணசாமி.
“ராமசாமி. ரொம்ப நாளா ஒரு சந்தேகம் மனசிலே இருந்துண்டே இருக்கு. தீபாவளி அன்னிக்கு அது என்ன கங்கா ஸ்னானம் ஆச்சான்னு கேட்கறது வழக்கமா இருக்கு. குளிக்கறதோ வீட்டிலே பாத்ரூமிலே, போர்வெல் வாட்டரில் . . . இன்று மட்டும் தண்ணீர் கங்கையா மாறிடறதா என்ன.”
வாசலில் யாரோ இருவர் சண்டைபோடும் சப்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார் ராமசாமி.
அடடே. . . நம்ம கிருஷ்ணசாமி ஆட்டோக்காரரிடம் ஏதோ ஊரே கேட்குமளவுக்கு சப்தம் போட்டுக்கொண்டு இருக்கிறாரே என்று அவரை நோக்கி நடந்தார்.
ருஷ்ணசாமி என்றும் இல்லாதவாறு அன்று குதூகலத்துடன் காணப்பட்டார்.
என்ன கிருஷ்ணசாமி. ரொம்ப சந்தோஷமாக இருக்காப் போல இருக்கு.
ஆமாம் ராமசாமி . இன்று ஒரு நல்ல காரியம் செஞ்சேன்.
திண்ணையில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார் கிருஷ்ண சாமி.
“என்ன மாமா, சௌக்யமா” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்.
“அடேடே, பட்டாபி. . .” காலங் கார்த்தாலேயே கடன் கேட்க வந்துட்டான் போல இருக்கே. கடன் வாங்கினா திருப்பிக் கொடுக்கவும் மாட்டாளே. கலக்கத்துடன் “வா. பட்டாபி. என்ன விஷயம்.” விசாரித்தார் கிருஷ்ணசாமி.
தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – மார்ச் 2011 தேதியூர் V.J. ராமன் என்ன கிருஷ்ணசாமி. . . ஏதோ தீவிரமா யோஜிக்கறாப் போல இருக்கு. வா. . …
கதவு தட்டும் சப்தம் கேட்டு அவசரமாக வந்து கதவைத் திறந்தார் கிருஷ்ணசாமி.
ஐயா… சாமி… தர்மம் போடுங்க சாமி.
‘காலங்காத்தாலேயே பிச்சை எடுக்க வந்துட்டீங்களா. சில்லரை இல்லைம்மா… போ… போ’ சட்டென்று கதவை அழுத்தி சாத்தினார்.
ஏன்னா… நேத்திக்கு நம்ம தியாகுவுக்கு ஒரு ஜாதகம் வந்ததே அந்தக் கவரைப் பார்த்தேளா.
ஏன் நேத்திக்கே சொல்லலே… சற்றுக் கோபத்துடன் கேட்டார் கிருஷ்ணசாமி.
மூல நக்ஷத்ர பெண் ஜாதகம். மெல்ல சொல்லிக்கலாமேன்னு இருந்துட்டேன். எல்லாம் நம்ம தலைவிதி. வர ஜாதகம் எல்லாமே மூலம், ஆயில்யம்தான். அப்படிப்பட்ட ஜாதகம் தான் அமையணும்னு இவனுக்கு விதி இருக்கோ… என்னவோ…
ஊரே ரெண்டு படும் அளவுக்கு வாசலில் ஏதோ சப்தம் கேட்கிறதே என்று ராமசாமியும் கிருஷ்ணசாமியும் தன் வீடுகளைவிட்டு வெளியே வந்தனர்.
அடடே… பட்டு சாஸ்திரிகளாத்து வாசலில் ஏதோ கூட்டம் நிற்கறதே… பட்டு சாஸ்திரிகள் பயத்துடன் உடல் நடுநடுங்க நிற்கும் காட்சி எல்லோரையும் ஸ்தம்பிக்க வைத்தது. அவர் அருகே முரடன் ஒருவன் சப்தம் போட்டுக் கொண்டு இருந்தான்.
“வா… வா… ராமசாமி… பேரன் பாஸ் செஞ்சுட்டான். அதுதான் எல்லோருக்கும் மஹா சந்தோஷம்.”
“ப்ளஸ்டு எழுதி இருந்தானே.. அந்தப் பேரனா. என்ன மார்க் வாங்கிருக்கான்.”
“இல்லே… இல்லே… அந்தப் பேரன் இல்லை. மூன்றாவது பெண் வயத்துப் பேரன் யுகேஜியிலிருந்து ஃபஸ்ட் ஸ்டான்டர்ட் பாஸ் பண்ணிட்டான். அதே ஸ்கூலேயே அட்மிஷனும் கிடைச்சுடுத்து. அதுதான் எல்லோருக்கும் சந்தோஷம், ஆர்ப்பாட்டம் எல்லாம்.”
பெங்களூருக்குச் சென்ற கிருஷ்ணசாமி தன் காரியங்களை முடித்துக்கொண்டு சென்னைக்குப் புறப்பட்டார்.
பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் தன் சீட்டுக்கு எதிரே பத்து வயது பையனும் அவனுடைய தந்தையும் அமர்ந்திருந்தார்கள். அந்தப் பையன் எல்லோரையும் பார்த்து வெகுளித்தனமா சிரித்துக்கொண்டு இருந்தான். ட்ரெயின் கொஞ்ச தூரம் சென்றதும் அந்தப் பையன் மேலும் உற்சாகமடைந்தான்.
பகல் 12 மணி… கடிகாரம் 12 முறை அடித்த களைப்பில் மௌனமானது.
காலை முதலே மீனாஷியிடம் போட்ட தேவையில்லாத வாக்குவாதத்தால் கிருஷ்ணசாமியின் மனமும் ஓய்ந்தது. இனிமேல் பேச்சைக் குறைத்து மௌனமாக இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார் கிருஷ்ணசாமி. சாப்பிட்ட களைப்பில் ஈசி சேரில் அமர்ந்தவரின் கண்ணில் பட்டது இந்த வார சஞ்சிகை ஒன்று. கடைசிப்பக்கத்தில் வந்துள்ள கட்டுரையைப் படிக்கத் தொடங்கினார்.
ராமசாமியும் கிருஷ்ணசாமியும் வாக்கிங் போகக் கிளம்பினார்கள்.
“அதோ பார் கிருஷ்ணசாமி… அந்த ஸ்கூட்டர்ல போறது நம்ம தெரு பட்டாபி பெண் மாதிரி இல்லே… யாரோ ஒரு பையன் கூடப் போறாளே … பையனைப் பார்த்தா ப்ராமணப் பையன் மாதிரி இல்லையே…”
வீட்டுக்குள் சிக்னல் கிடைக்காததால் பையன் வாங்கிக் கொடுத்த புதிய மொபைல் போனை எடுத்துக்கொண்டு வாசலுக்குச் சென்றார் கிருஷ்ணசாமி.
புத்தாண்டு கொண்டாட்டங்களை உற்சாகத்துடன் கொண்டாடி இரவு நன்றாகத் தூங்கிய கிருஷ்ணசாமியை டெலிபோன் மணி அடித்து எழுப்பியது.
உற்சாகத்துடன் எழுந்த கிருஷ்ணசாமி ‘ஹலோ யார் பேசறது…’ அடுத்த சில நொடிகளில் கிருஷ்ணசாமியின் முகம் சோகமாக மாறியது.
என்ன கிருஷ்ணசாமி… ‘உடம்பு தேவலையா…’ கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் ராமசாமி..
‘தேவலாம் ராமசாமி… என்ன இருந்தாலும் இந்தப் பாழாப்போன மனசு எதைச் செய்யாதே என்று சொன்னாலும் அதைத்தான் செய்யத் தூண்டுகிறது. விஷயம் தெரியுமா! பட்டாபியோட பொண்ணு…’
இவர் பிரண்டு அந்த உபன்யாஸகருக்குத் தான் புத்தி கெட்டுப்போய் கோயில் சுவற்றின் மீது விஸர்ஜனம் பண்ணினார்னா இவருக்கு எங்கே மாமா புத்திபோச்சு… சபாவிலே உபன்யாஸம் முடிந்ததும் அங்கேயே பாத்ரூம் போயிட்டு வந்திருக்காலாமோன்னோ… கண்ட கண்ட இடத்திலே போனதினாலே விளைவு யுரினரி இன்பெக்ஷன் வந்து ராத்திரிலேந்து ஜுரம்… டாக்டர்கிட்டே காட்ட கிளம்பிண்டு இருக்கார்