தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today – ஆகஸ்ட் 2010
தேதியூர் V.J. ராமன்
“ஸார்… ராமசாமி என்கிறது…”
“நான்தான். என்ன விஷயம். கூரியர் தபாலா. கொடுங்கள்” என்று தபாலை வாங்கிப் பிரித்தார் ராமசாமி. ராஜா மஹாலில் நடக்க இருக்கும் ‘பாலயக்ஞம்’ குழந்தைகள் நடத்தும் பாட்டுக் கச்சேரிக்கான இரண்டு டிக்கெட்டுகள்.
கிருஷ்ணசாமியை அழைத்துக்கொண்டு போய் வரலாம் எனத் தீர்மானித்தார் ராமசாமி. கச்சேரி நாளும் வந்தது… இருவருக்கும் முதல் வரிசையில் அமர இடமும் கிடைத்தது.
பாலாரமணி என்ற பையன் மிக அருமையாகப் பாடிக் கொண்டிருந்தான். இடையில் ஒரு அறிவிப்பு… இந்த யக்ஞத்துக்கு வைணவ உபன்யாஸகர். கீதாசாரம் சொல்லும் மஹான்… வைணவம் போற்றும் பிதாமஹர்… தலைமை விருந்தினராக வர இருக்கின்றார். சில நிமிடங்களில் வந்துவிடுவார்…
பாலாரமணி… தில்லை நடராஜனைப் பற்றிய அந்தக் கீர்த்தனையை மிக அற்புதமாகப் பாடிக்கொண்டு இருந்தான். உபன்யாசகர்… தலைமை விருந்தினர் வந்துவிட்டார் என்ற அறிகுறி தெரிய ஆரம்பித்தது. உபன்யாஸகருடைய சிஷ்யர் ஒருவர் வேகமாக ஓடிவந்து மேடையில் ஏறிப் பாடிக்கொண்டிருந்த பையனிடம் ‘சிவனைப் பற்றிய பாட்டை உடனே நிறுத்து. பெருமாளைப் பற்றிப் பாடு… தலைமை விருந்தினருக்குக் கோபம் வந்துவிடலாம். நிறுத்து… நிறுத்து. சிவனைப் பற்றிப் பாடுவதை உடனே நிறுத்து. திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார்.
“பாதியிலே பாட்டை நிறுத்த முடியாது மாமா… அடுத்த பாட்டு பெருமாளைப் பற்றிப் பாடுகிறேனே…”
இதற்குள் தலைமை விருந்தினர் மேடை அருகே வந்துவிட்டார். வந்தவர் பாலாரமணி பாடும் பாட்டைக் கேட்டதுதான் தாமதம் உடனே விறுவிறு என்று வாசல் பக்கம் நடையைக் கட்டினார். சபா காரியதரிசி மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் என்ன என்று புரியாமல் அவருடன் ஓடினார்கள். வாசலுக்குச் சென்றவர் சபா காரியதரிசியை மிகுந்த கோபத்துடன் முறைத்துப் பார்த்துவிட்டு காரில் ஏறிக் கிளம்பு என்று ட்ரைவருக்கு உத்திரவிட்டார்.
என்ன நடக்கின்றது என்று புரியாமல் குழம்பிய காரியதரிசியைப் பார்த்து சிஷ்யர் சொன்னார். “என்ன ஸார்… எவ்வளவு சொல்லியும் பையன் சிவனைப் பற்றிப் பாடியது உபன்யாஸகருக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை… அதுதான் திரும்பிப் போய்விட்டார்.” இதைக் கவனித்துக்கொண்டிருந்த பாலா ரமணியின் தகப்பனார். ஆயில் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருப்பவர். மிகுந்த கோபத்துடன் “இப்படிப்பட்ட சபையில் எனது பையன் பாடத் தேவையில்லை” என்று பையனை அழைத்துக்கொண்டு அவர் ஒருபுறம் நடையைக் கட்டினார்.
“என்ன த்வேஷம் பார்த்தாயா கிருஷ்ண சாமி. இப்படி ஒரு ரகளையை நாம் இன்று பார்க்க வேண்டும் என்பது பகவானின் ஆக்ஞை போல் இருக்கின்றது. என்ன பாட்டு பாடினால் என்ன… குழந்தையை ஆசிர்வதிப்பதை விட்டுவிட்டுக் கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டவர் போல நடையைக் கட்டி விட்டாரே இந்த மகானுபவர்…” மற்றவர்களுக்குத்தான் உபதேசமா… (உண்மைச் சம்பவம் இது)
கிருஷ்ணசாமிக்குத் தலை சுற்றியது. இப்படியும் மானுடர்கள் இருப்பார்களா. இருவரும் வீட்டுக்குக் கிளம்பி வரும் வழியில் ஜோதிடரைப் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று அவரது அகத்தில் நுழைந்தார்கள். நடந்த விவரங்களையெல்லாம் புரிந்துக் கொண்டார் ஜோஸ்யர்.
“ராமன் ஸார். இந்த த்வேஷத்துக்கு மூலகாரணம் என்ன…”
த்வேஷம் ஒருவருக்குப் பலவிதங்களில் வருகின்றது. சிலரை நாம் தூரத்தில் பார்க்கும்போதே “ஐயோ… இவன் வரானே…” என்று ஒதுங்கிப்போகின்றோம். அந்த நபர்மீது கொண்ட வெறுப்பு நமக்கு அவரால் ஏற்பட்ட பாதகங்களினால் துவேஷமாக மாறி விடுகின்றது.
“என்னமோ, இவரைப் பார்த்தாலே எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை” என்று சில சமயங்களில் சொல்கின்றோமே. பழகவில்லை… பேசவில்லை… எந்தக் கெடுதலும் அவர் நமக்குச் செய்யவில்லை… என்றாலும் சிலரைக் கண்டாலே நமக்கு பிடிப்பது இல்லை. இந்த த்வேஷம் நமக்கும் அவருக்கும் பூர்வ க்ருதம் ஏற்பட்ட வெறுப்பின் வெளிப்பாடு என்றும் சொல்லலாம்.
ஒருவர் மற்றவர்மீது கொள்ளும் பொறாமையின் காரணமாகவும் துவேஷம் உருவாகின்றது. ஒரே இடத்தில் வேலைசெய்யும் இருவர். திறமை குறைந்தவர் திறமை வாய்ந்தவரைப் பார்த்து துவேஷப்படலாம். வியாபாரத்தில் போட்டியின் காரணமாக த்வேஷம் சிலசமயங்களில் கொலை வெறியில் முடிந்ததாகச் செய்திகளை நீங்கள் படித்திருக்கலாமே…
ஒருவர் மற்றவரை எப்போதும் குறை சொல்லிக்கொண்டிருந்தாலும் துவேஷம் வந்துவிடுகின்றது. மாமியார் மருமகள் துவேஷம் இதனால்தான்…
மத, இன த்வேஷங்கள் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை.
இப்படி த்வேஷ வியாக்யானம் செய்து கொண்டு இருந்த ஜோஸ்யரை இடைமறித்தார் கிருஷ்ணசாமி.
த்வேஷத்தினால் ஏற்படும் விளைவுகள் தாம் எவை. கொஞ்சம் புரியும்படி சொல்றேளா…
த்வேஷப்படுபவர் தான் எப்போதுமே பாதிக்கப்பட்டவராக ஆகின்றார். தனது முடிவினைத் தானே தேடிக்கொள்பவர்கள் தான் த்வேஷப்படுபவர்கள் என்றாலும் இவர்கள் என்றுமே தன் வாழ்நாளில் தன்னை உணரவும்மாட்டார்கள்… திருந்தவும்மாட்டார்கள்.
“ஜோதிஷ ரீதீயாக இதை எப்படித் தெரிந்துக்கொள்வது…” கிருஷ்ணசாமி அடுத்த கேள்வியைத் தொடுத்தார்.
தான் என்ற எண்ணம் அதிகம் உடையவர்களே பெரும்பாலும் த்வேஷப்படுகின்றார்கள். லக்னாது மற்றும் சந்திராது குரு பகவான் கேந்திரங்களிலோ, மூன்றாம் இடத்திலோ இருப்பவர்களுக்கு ‘த்வேஷம்’ வந்துவிடுகின்றது. லக்னத்தில் 2, 5, 7, 9ஆம் இடங்களில் பித்ருகாரகன் சூரியன் வரப்பெற்றவர்களும் செவ்வாய் 1, 2, 4, 7, 8ஆம் இடங்களில் வரப் பெற்றவர்களும் ஏதோ ஒரு வகையில் மற்றவர் மேல், ஏன்… தனது வாழ்க்கைத் துணைமேல்கூட த்வேஷப்பட ஆரம்பித்துவிடுவார்கள். சந்திரன் நீச்சம் பெற்றும் மறைவிடம் அடைந்தும் உள்ள ஜாதகர்களும் மனவலிமை தன்னம்பிக்கை இல்லாமல் த்வேஷப்படத் தொடங்குகிறார்கள்… இப்படி நிறையக் காரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
“கொஞ்சம் நாங்கள் புரிந்துகொள்றாப்போல் உங்களது பாணியில் சொல்லுங்களேன்…” ராமசாமி தன் பங்குக்குக் கேட்டார்.
அரண்மனை ஒன்றில் சலவைத் தொழிலாளி ஒருவன் கடுமையாக உழைத்து பணம் சம்பாதித்துக்கொண்டிருந்தான். அதே அரண்மனையில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளியும் குறைந்த வருமானம் பெற்று வேலைசெய்துகொண்டிருந்தான்.
“சலவைத் தொழிலாளி எப்படிச் சாமர்த்தியமாக உழைத்து சம்பாதிக்கிறான் பாருங்கள்… உங்களுக்கு இந்தத் துப்பு இல்லையே” என்று மண்பாண்டத் தொழிலாளியின் மனைவி தினமும் வசைபாட ஆரம்பித்தாள். விளைவு, கோபம்… இயலாமை இவை த்வேஷமாக உருவெடுத்தது.
ராஜா நல்ல மன நிலையில் இருக்கும் சமயத்தில் “மாமன்னரே… நமது யானைகள் மிகவும் கருப்பாக உள்ளன… துணிகளை வெளுப்பாக்கும் நமது சலவைத் தொழிலாளியிடம் பொறுப்பினை ஒப்படைத்தால் யானைகளை வெள்ளையாக்கிக் கொடுத்துவிடுவார்… உலகிலேயே வெள்ளை யானைகள் உள்ள அரசு உங்களுடையது என்று உலகமே உங்களைப் பாராட்டும்…” தூபம் போட்டான் மண்பாண்டத் தொழிலாளி.
புத்திகெட்ட மன்னனுக்குப் புகழ் வெறி தலைக்கேறியது. நல்ல யோஜனையாக இருக்கின்றதே. சலவைத் தொழிலாளியை அழைத்து உத்தர“ஸார்… ராமசாமி என்கிறது…”

புத்திகெட்ட மன்னனுக்குப் புகழ் வெறி தலைக்கேறியது. நல்ல யோஜனையாக இருக்கின்றதே. சலவைத் தொழிலாளியை அழைத்து உத்தரவும் போட்டான்.
மண்பாண்டத் தொழிலாளியின் குயுக்தியைப் புரிந்துகொண்டான் புத்திசாலியான சலவைத் தொழிலாளி.
அரசே… என்னிடம் துணிகளை வெள்ளாவி வைத்து வெளுக்கும் அளவுக்குத்தான் பானைகள் உள்ளன. நமது யானைகள் கொள்ளும் அளவுக்குப் பானைகளை நமது மண்பாண்ட தொழிலாளியைச் செய்துதரச் சொல்லுங்கள். உடன் உங்கள் ஆணையை நிறைவேற்றுகின்றேன்.
மாட்டிக்கொண்டான் மண்பாண்ட தொழிலாளி. ஒரு பானைகூடச் செய்ய முடியவில்லை. அரசனுக்குக் கோபம் தலைக்கேறியது. தூக்கிலிடுங்கள் இவனை… என்ற ஆணையும் பிறப்பித்தான்.
கோபம் பொறாமைக்கு வித்திட்டு த்வேஷமாகி கடைசியில் தன் உயிரையே மாய்த்துக்கொள்ளும் வழிகளைத் தேடித் தந்துவிடுகின்றது பார்த்தீர்களா… கோபம் ஒருவனை மூடனாக்கிக்கொள்ளும்… பொறாமை புத்தி இல்லாதவனாக ஆக்கி கொன்றுவிடும்.. த்வேஷம் தன்னைச் சேர்ந்தவர்களையும் நிர்கதியில்லாமல் செய்துவிடும்… பாண்டவர்கள்மீது ஏற்பட்ட த்வேஷம் கௌரவர்களை இருந்த இடம் தெரியாமல் செய்துவிட்டதே இதற்குச் சான்று… புரிகின்றதா…
புரிந்தவர்கள் போல் இருவரும் கிளம்பினார்கள்
கிருஷ்ணசாமி வீட்டுக்குள் நுழைந்தார்…
“ஏன்னா… எங்கே ஊர்சுற்றிவிட்டு வருகின்றீர்கள்… பசும்பால் சாப்பிட்டால்தான் நல்லது என்று டாக்டர் சொன்னது மறந்துவிட்டதா..“ஸார்… ராமசாமி என்கிறது…”

“ஏன்னா… எங்கே ஊர்சுற்றிவிட்டு வருகின்றீர்கள்… பசும்பால் சாப்பிட்டால்தான் நல்லது என்று டாக்டர் சொன்னது மறந்துவிட்டதா… பசு மாட்டுக்கு ஏற்பாடு செய்யச்சொன்னேனே… செய்தீர்களா.”
“சொல்ல மறந்துட்டேன் மீனாக்ஷி… நேத்திக்கே மாட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சு. 15 லிட்டர் கறக்குமாம்… நாளைக்கே நம்மாத்து கொட்டிலுக்கு வந்துவிடும்.”
“என்ன… 15 லிட்டர் கறக்குமா… அப்படின்னா பக்கத்துத் தெருவிலே இருக்கும் என் தம்பியாத்துக்கும் இரண்டு லிட்டர் தினம் கொடுக்கலாம். என்னண்ணா சொல்றேள்…”
கோபத்துடன் ஒரு முறை முறைத்தார் கிருஷ்ணசாமி…
“ஆமாம். அப்படி என்னதான் த்வேஷமோ… எங்காத்து மனுஷாளைக் கண்டால் உங்களுக்கு…” மாமி முணுமுணுப்பது கேட்டது.
விடுவிடு என்று வந்த வேகத்திலேயே வெளியில் கிளம்பினார் கிருஷ்ணசாமி. “கொடுத்த அட்வான்ஸைத் திரும்பப் பெற…” . பசு மாட்டுக்கு ஏற்பாடு செய்யச்சொன்னேனே… செய்தீர்களா.”
“சொல்ல மறந்துட்டேன் மீனாக்ஷி… நேத்திக்கே மாட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சு. 15 லிட்டர் கறக்குமாம்… நாளைக்கே நம்மாத்து கொட்டிலுக்கு வந்துவிடும்.”
“என்ன… 15 லிட்டர் கறக்குமா… அப்படின்னா பக்கத்துத் தெருவிலே இருக்கும் என் தம்பியாத்துக்கும் இரண்டு லிட்டர் தினம் கொடுக்கலாம். என்னண்ணா சொல்றேள்…”
கோபத்துடன் ஒரு முறை முறைத்தார் கிருஷ்ணசாமி…
“ஆமாம். அப்படி என்னதான் த்வேஷமோ… எங்காத்து மனுஷாளைக் கண்டால் உங்களுக்கு…” மாமி முணுமுணுப்பது கேட்டது.
விடுவிடு என்று வந்த வேகத்திலேயே வெளியில் கிளம்பினார் கிருஷ்ணசாமி. “கொடுத்த அட்வான்ஸைத் திரும்பப் பெற…” வும் போட்டான்.
மண்பாண்டத் தொழிலாளியின் குயுக்தியைப் புரிந்துகொண்டான் புத்திசாலியான சலவைத் தொழிலாளி.
அரசே… என்னிடம் துணிகளை வெள்ளாவி வைத்து வெளுக்கும் அளவுக்குத்தான் பானைகள் உள்ளன. நமது யானைகள் கொள்ளும் அளவுக்குப் பானைகளை நமது மண்பாண்ட தொழிலாளியைச் செய்துதரச் சொல்லுங்கள். உடன் உங்கள் ஆணையை நிறைவேற்றுகின்றேன்.
மாட்டிக்கொண்டான் மண்பாண்ட தொழிலாளி. ஒரு பானைகூடச் செய்ய முடியவில்லை. அரசனுக்குக் கோபம் தலைக்கேறியது. தூக்கிலிடுங்கள் இவனை… என்ற ஆணையும் பிறப்பித்தான்.
கோபம் பொறாமைக்கு வித்திட்டு த்வேஷமாகி கடைசியில் தன் உயிரையே மாய்த்துக்கொள்ளும் வழிகளைத் தேடித் தந்துவிடுகின்றது பார்த்தீர்களா… கோபம் ஒருவனை மூடனாக்கிக்கொள்ளும்… பொறாமை புத்தி இல்லாதவனாக ஆக்கி கொன்றுவிடும்.. த்வேஷம் தன்னைச் சேர்ந்தவர்களையும் நிர்கதியில்லாமல் செய்துவிடும்… பாண்டவர்கள்மீது ஏற்பட்ட த்வேஷம் கௌரவர்களை இருந்த இடம் தெரியாமல் செய்துவிட்டதே இதற்குச் சான்று… புரிகின்றதா…
புரிந்தவர்கள் போல் இருவரும் கிளம்பினார்கள்
கிருஷ்ணசாமி வீட்டுக்குள் நுழைந்தார்…
“ஏன்னா… எங்கே ஊர்சுற்றிவிட்டு வருகின்றீர்கள்… பசும்பால் சாப்பிட்டால்தான் நல்லது என்று டாக்டர் சொன்னது மறந்துவிட்டதா… பசு மாட்டுக்கு ஏற்பாடு செய்யச்சொன்னேனே… செய்தீர்களா.”
“சொல்ல மறந்துட்டேன் மீனாக்ஷி… நேத்திக்கே மாட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சு. 15 லிட்டர் கறக்குமாம்… நாளைக்கே நம்மாத்து கொட்டிலுக்கு வந்துவிடும்.”
“என்ன… 15 லிட்டர் கறக்குமா… அப்படின்னா பக்கத்துத் தெருவிலே இருக்கும் என் தம்பியாத்துக்கும் இரண்டு லிட்டர் தினம் கொடுக்கலாம். என்னண்ணா சொல்றேள்…”
கோபத்துடன் ஒரு முறை முறைத்தார் கிருஷ்ணசாமி…
“ஆமாம். அப்படி என்னதான் த்வேஷமோ… எங்காத்து மனுஷாளைக் கண்டால் உங்களுக்கு…” மாமி முணுமுணுப்பது கேட்டது.
விடுவிடு என்று வந்த வேகத்திலேயே வெளியில் கிளம்பினார் கிருஷ்ணசாமி. “கொடுத்த அட்வான்ஸைத் திரும்பப் பெற…”
No Comment