தேதியூர் பக்கம் – Article published in Brahmin Today -பிப்பிரவரி 2010
தேதியூர் V.J. ராமன்

பத்து பொருத்தங்களைப் பற்றி கேள்விபட்டுள்ளோம். அது என்ன சார் பணீரெண்டாம் பொருத்தம் என்கீறீர்களா…

ஒருவருடைய வாழ்க்கை மிகச் சிறந்த முறையில் அமைய வேண்டுமானால் அவருக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை நடந்த சிறந்த வாழ்க்கைத் துணை தேவைப்படுகின்றது. பெண்ணுக்கு 21 வயதுக்குள் ஆணுக்கு 27 வயதுக்குள் திருமணம் நடந்து விடுமேயானால் அவர்களது இல்லற வாழ்க்கையின் பின் பாதி அவர்களது மகப்பேறுகளால் காப்பாற்றப்படும் சூழ்நிலைகள் உருவாகி மகிழ்ச்சியை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படி எல்லோருடைய திருமணங்களும் அவர்கள் விருப்படியே நடந்து விடுகின்றனவா என்றால் ‘இல்லை’ என்றே கூற வேண்டியுள்ளது.

ஒருவரது திருமணம் நிச்சியிக்கப்படும்போது ஆண் பெண் இருவர் ஜாதக ரீதியாகவும் திருமண பொருத்த விஷயத்தில் நான்கு இடங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் தரப்படுகின்றது. களத்திரஸ்தானம் எனப்படும் 7ம் இடம், ஆயுள்ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் எனப்படும்.

8ம் இடம், புத்திரஸ்தானம் எனப்படும் 5ம் இடம் மற்றும் குடும்பஸ்தானம் எனப்படும் 2ம் இடம். பொதுவாக எல்லா ஜோதிடர்களும் இந்த நான்கு ஸ்தானங்களுக்கு மிகவும் முக்யத்துவம் கொடுத்து ஜாதகப் பொருத்தங்களைப் பார்த்து தோஷ சாம்யங்களை நிர்ணயம் செய்து முடிவு எடுக்கின்றார்கள்.

பெரும்பாலான ஜாதகர்கள் நல்வாழ்க்கைத் தொடங்கினாலும் சிலரின் அன்னோன்யம், மகிழ்ச்சி இன்மை அவர்களது குடுமப வாழ்க்கையை நரகமாகவும் ஆக்கிவிடுகின்றது.

மேற்சொன்ன நான்கு இடங்களின் பொருத்தம் இருப்பதைத் தவிர மிகவும் முக்யமாக பார்க்கப்பட வேண்டிய ஸ்தானம் 12ம் இடம்.

இந்த இடம் ஸயனஸ்தானம்,மோஷ ஸ்தானம், விரயஸ்தானம் என்று பலவாறாகவும் கூறப்படுகின்றது.பொதுவாக களத்திர அன்னோன்யம் என்பதே

ஸயன அன்னோன்யத்தில் அடிப்படையில் அமைந்த ஒன்று என்றே கூறலாம். ஸயன அன்னோன்யம் இல்லாத தம்பதியர்களிடம் களத்திர அன்னோன்யத்தை எதிர்பார்க்க இயலுமா என்பதை பெரும்பாலான ஜோதிடர்கள் கருத்தில் கொள்வதில்லை. சொல்லப்போனால் திருமணப்பொருத்தம் பார்க்கும் போது முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் சயன அன்னோன்ய பாவமான 12ம் இடமே. சயனஸ்தானம் சரியில்லாதவர்களுக்கு களத்திர அன்னோன்யம் இருக்காது. களத்திர அன்னோன்யம் இல்லாத போது புத்திர சௌக்யமும் (5ம் பாவம்) சரியாக இருக்காது. புத்திர ஸ்தானம் இல்லாத போது குடும்பம் (2ம் பாவம்) எப்படி உருவாகும் எனவே இனிமையான இல்லற வாழ்க்கை அமைய சயனஸ்தானம் சரியாக இருந்தால்தான் மற்ற பாவங்களின் பலங்களும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாக அமையும்.எனவே 2,5,7,8 ம் இடங்களில் தோஷ சாம்யம் இருந்தாலும் 12ம் இடத்தின் பொருத்த விஷயம் இருவர் ஜாதக ரீதியாகவும் சரியாக இல்லை என்றால் அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சி இன்றியே தான் இருக்கும்.

சர்தார்ஜீ ஒருவர் வாரம் ஒருமுறை மோட்டார் சைக்கிளில் மூட்டைகளை பாக்கிஸ்தானிலிருந்து கடத்தி வந்து கொண்டு இருந்தார்.

இந்திய பார்டரில் அவரை மடக்கி பிடித்து விசாரிப்பதும் வழக்கமாகவே இருந்தது. வாராவாரம் மூட்டைகளை பிரித்து பார்த்து அவையாவும் மணல் மூட்டைகளே என்று உறுதிசெய்யப்பட்டு சர்தார்ஜீ விடுதலை செய்யப்படுவதும் வழக்கமாகவே இருந்தது. இந்த சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்த சமயத்தில் ஒரு ராணுவ அதிகாரிக்கு மட்டும் மிகுந்த சந்தேகம் ஏற்பட்டது. ஒரு நாள் இதுபோன்று மூட்டை கடத்தல் நடந்த சமயத்தில் ராணுவ அதிகாரி அந்த சர்தார்ஜீயைப் பார்த்து ‘நீ ஏதோ தவறு செய்கின்றாய் என்று மட்டும் தெரிகின்றது… ஆனால் எங்களால் புரிந்து கொள்ள இயலவில்லை.. என்ன தவறு என்பதை மட்டும் சொல்லிவிட்டால் உன்னை இப்போது விட்டு விடுகின்றேன்…’ என்றார்.

“ஐயா.. வாரா வாராம் நான் திருடிக்கொண்டு வருவது புதுப்புது மோட்டார் சைக்கிள்களை.. ஆனால் நீங்கள் ஆராய்வது நான் கொண்டு வரும் மணல் மூட்டைகளை…” சர்தார்ஜீ இப்படீ கூறியதும் வாயடைத்துப் போனார் அந்த ராணுவ அதிகாரி. எதை முக்கியமாக பார்க்க வேண்டுமோ அதை விடுத்து மற்றதை ஆராய்ந்தது எவ்வளவு மூடத்தனம் என்பது புரிந்தது அவருக்கு.

ஆக அன்னோன்யமான.. தாம்பத்ய வாழ்க்கையை நிர்ணயிக்க இதன் அடிப்படையான ஸயன பாவத்தை (12ம் இடம்) ஆராயாமல் மற்ற பாவங்களைப் பார்த்து முடிவு செய்யும் ஜோதிட அன்பர்கள் சற்று சிந்திக்க வேண்டிய விஷயம் இது என்று புரிந்துகொண்டால் சரி..

களத்திர அன்னோன்யத்தை எந்த எந்த கிரகங்கள் முக்கியமாக பாதிக்கின்றன என்று பார்க்கலாம்.

12ம் இடமான சயனஸ்தானத்தில் பாபகிரகங்களான செவ்வாய், சூரியன், சனி, ராகு, கேது இருப்பது.

சயனஸ்தானத்துக்கு மேற்சொன்ன பாபிகளீன் பார்வை இருப்பது.

களத்திர ஸ்தானம் என்ப்படுன் 7ம் இடத்தில் பாபகிரகங்களான செவ்வாய், சூரியன், சனி இருக்கும் நிலை.

7ம் இடத்துக்கு செவ்வாய், சூரியன் சனி பார்வை இருக்கும் நிலை.

8ம் இடத்தில் பெண்ணுக்கு செவ்வாய்,ராகு இருக்கும் நிலை.

பூர்வ புன்ய ஸ்தானாதிபதி (5க்குடைய கிரகம்) களத்திரஸ்தானம் (7ம் இடம்) அடையும் நிலை. இதே போல் 7க்குடைய கிரகம் 5ம் இடம் அடையும் நிலை.

குடும்பஸ்தானம் எனப்படும் 2ம் இடத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது இருக்கும் நிலை.

இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு அன்னோன்யமான வாழ்க்கை பொதுவாக இருப்பதில்லை என்றாலும் இதே போன்ற கிரக நிலை இருவர் ஜாதக ரீதியாகவும் அமைந்துவிட்டால் அன்னோன்யமான தாம்பத்திய வாழ்க்கை நிச்சியம் இருக்கும் என்பது உண்மை. “தோஷ சாம்யாத் தம்பதி பாக்யவான்” என்ற ஜோதிட சாஸ்திர வாக்யத்தின் படி தம்பதிகள் இருவர் ஜாதகத்திலும் தோஷங்களை ஏற்படுத்தும் கிரக நிலைகள் ஒத்துப்போனால் அந்த தம்பதிகள் இணைபிரியாத தம்பதிகளாகவே என்றும் இருப்பர்கள் என்பதும் உண்மை.சகல நன்மைகளையும் வாழ்க்கையில் அனுபவிப்பார்கள் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.

அருகில் இருந்த என் நண்பர் சொன்னார், எனக்கு இந்த கவலை எல்லாம் இல்லை…

ஏன்… என்றேன். எனக்குதான் திருமணமே ஆகவில்லையே… என்றார். அதற்கும் இந்த 12ம் பாவம் தான் காரணம். என்றேன். எப்படி சொல்கின்றீர்கள்… என்னுடைய ஜாதகம் சுத்தமான தோஷமே இல்லாத ஜாதகம் என்று அல்லவா நினைத்துக் கொண்டும் இருக்கின்றேன். என்றார்.

12ம் இடத்தில் உமது ஜாதகத்தில் கேது பகவான் இருக்கின்றார். சன்பாயோகம் உடைய நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டுமா…

இந்த கருத்துகள் அவரது மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்த தொடங்கியதை பார்த்த அடியேனது மனம் சற்று கனக்கத்தான் செய்தது.


Contact Astrologer